அரசியலில் அடுத்த மூவ்... ஆளுநரை சந்திக்கிறார் விஜய்
Dec 30, 2024, 10:43 IST1735535638336
இன்று மதியம் 1 மணிக்கு ஆளுநரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என்று இன்று காலை விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில் அடுத்த நகர்வாக ஆளுநரை சந்திக்கவுள்ளார்.