மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்
விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார். இதனைத்தொடர்து தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாணி வி.சாலையில் நடைபெற்றது. அதில் தன் கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல்திட்டம், கொள்கைத்தலைவர்கள் யார், அரசியல் எதிரிகள் யார் யார் என்பதையெல்லாம் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர். அவர்களில் சுமார் 25 பேரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் கவுரவிக்கிறார். நிலம் தந்தவர்களுக்கு தனது கைகளால் உணவு பரிமாறுகிறார் விஜய்.