100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்த விஜய் சேதுபதி

 
tt

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை வாரி குவிக்கும் கதாநாயகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் . ஆண்டிற்கு ஒரு படம் என்றாலும் குறிப்பிடத்தக்க நடிகர்கள் 100 கோடி வசூலை அள்ளி வருகின்றனர் . இதன் மூலம் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ,திரையரங்கு உரிமையாளர்கள் என பலரும் லாபம் அடைகின்றனர். 

tt

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ,  விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ் , சிலம்பரசன்,  சிவகார்த்திகேயன்,  விக்ரம்,  கார்த்தி,  விஷால்,  பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கடந்த ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியவர்கள். 

tt

இந்த பட்டியலில் தற்போது விஜய் சேதுபதி இடம் பிடித்துள்ளார்.  குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த  இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது திரைப்படம் ஆன மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து இப்படம் பேசப்பட்டிருந்தது.  கடந்த ஜூன் 14ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் சுமார் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.  18 நாட்களில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை படம் கவர்ந்தது.  20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டி நடத்தியுள்ளதால் பட குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.