ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் உத்தரவு...!
ஜனவரி இறுதிக்குள் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தவெக பொதுச்செயலாளர் ஆனந்திற்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜனவரி இறுதிக்குள் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தவெக பொதுச்செயலாளர் ஆனந்திற்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதமாக உட்கட்டமைப்பு பணி நடக்கும் நிலையில் பொறுப்பாளர் நியமனத்தை முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கவும் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.