கரூரில் திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்!

 
விஜய் விஜய்

கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய விஜய்; கரூர் செல்ல திட்டம்?

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் கரூர் பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். விஜய் வாகனம் செல்லும் நேரத்தில் பின்னால் யாரும் வர அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோல் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாருக்கும் அனுமதி இல்லை. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆலோசித்து தேதியை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.