கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு போலீசாருக்கு கடிதம்! விஜய்க்கு செக் வைத்த போலீஸ்

 
vijay

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு போலீசாருக்கு நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

vijay

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபோல்  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி 3 விதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.   பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடத்தி   கட்சிக்கொடியனை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொடியேற்றப்பட்ட ஒத்திகை நிகழ்வு கூட சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு போலீசாருக்கு நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நாளை மறுநாள் 5,000 பேருக்கு மத்தியில் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெறவிருப்பதாகவும், அதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொடி ஏற்றியவுடன் பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் மத்தியில் முதல் அரசியல் உரையாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். 5 ஆயிரம் பேர் மத்தியில் கொடியேற்று விழா நடத்த விஜய் தரப்பிற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கவிஞர் விவேக் வரியில், இசையமைப்பாளர் தமன் இசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. கட்சிக்கான பாடல்களை, வெளியிடுவது குறித்து  இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் நாளை தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவில், கட்சி தலைவர் விஜய் பேசுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.