கரூர் செல்லும் விஜய் - டிஜிபி அலுவலகம் பதில் கடிதம்

 
பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய் பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய்

கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் கரூர் செல்வதற்காக பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்திற்கு தவெகவினர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு பதில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்களை தெரிவித்திருந்தாலும், விஜய் நேரில் சந்திக்கவில்லை என்பதால் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. விஜய் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலமாக சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதிக்கோரி டிஜிபி அலுவலக மெயிலுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் விஜய் கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுக தவெகவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவெகவினர் அணுகுமாறு டிஜிபி அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. விஜய் செல்லும் தேதி, நேரம், இடம், செல்லும் வழி போன்ற விபரங்களை கரூர் மாவட்ட காவல்துறையிடம் சமர்பிக்க டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. விஜய்யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக தவெக தரப்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரங்களை அளித்த பிறகு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது.