#BREAKING ஈரோட்டில் விஜய் பிரச்சார தேதி மாற்றம்
ஈரோட்டில் விஜய் வரும் 16ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள தவெக.வினர் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் போதாததால் 16ஆம் தேதிக்கு பதிலாக 18.ம் தேதிக்கு பிரச்சார கூட்டத்தை அக்கட்சியினர் மாற்றி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 16ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அக்கட்சியினர் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த இடத்தில் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்ததன் அடிப்படையில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கே ஏ செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரின் தரப்பில் இருந்து 84 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் 16ஆம் தேதிக்கு பதிலாக பதினெட்டாம் தேதி விஜயின் பிரச்சாரத்தை அக்கட்சியினர் மாற்றி உள்ளனர்.


