கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் முடியை வெட்டப்பட்டதாக பரவும் வீடியோ

 
hair

கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் கூந்தல் வெட்டப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Image

“நமது தமிழகப் பள்ளியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவம் இது இந்த செயல் ஐயா அன்பில் மகேஷ் ஏரியாவுக்குள் வராது..(சரி பார்க்கவும்)” எனக்கூறி டிவிட்டரில் மாணவிகளின் தலைமுடியை வெட்டும் வீடியோ வைரலானது. இந்நிலையில் இது தமிழகத்தில் எடுத்த வீடியோ இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி 
அந்த வீடியோ புற்றுநோயாளிகளுக்காக  தானம் செய்த வீடியோ எனவும் மதரீதியான வெறுப்பு, வதந்தியைப் பரப்ப வேண்டும் என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலம்‌ செம்மணாரில்‌ உள்ள செயிண்ட்‌ சேவியர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. கடந்த 2019ஆம்‌ ஆண்டு 39 பள்ளி மாணவிகள்‌ புற்று நோயாளிகளுக்காக தங்கள்‌ தலைமுடியை தானம்‌ செய்தபோது எடுக்கப்பட்டதாக இந்த காணொளி சமூக வலைதளங்களில்‌ பகிரப்பட்டுள்ளது.