டி.டி.எப் வாசனின் வீடியோவால் வந்த சிக்கல்! வனத்துறை அதிரடி
வாசன் வீடியோ வெளியிட்ட செல்ல பிராணிகள் விற்பனையகத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலைபகுதியில் ‘ஷீப்பிலிஸ்ட்’ என்ற செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் விற்பனையகம் உள்ளது. இங்கு விதவிதமான கிளிகள் லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை வகைகள், பூனை வகைகள் என செல்லப்பிராணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விற்பனையகத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், ஒரு மணி நேரங்களாக சோதனை செய்தனர்
இது வழக்கமான பரிசோதனையா? அல்லது தடை செய்யப்பட்ட பிராணிகள் விற்பனை செய்யபடுகிறதா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த கிளியும் மற்றும் அரியவகை ஆமையும் இங்கிருந்து கைப்பற்றப்பட்டு செல்லப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் வழங்கினால் இவை இரண்டும் மீண்டும் வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்பு சரச்சைகளுக்கு பெயர் போன டிடிஎப் வாசன் இந்த விற்பனையகத்திற்கு வந்து தான் கையோடு கொண்டு வந்த பாம்பிற்கு கூண்டு வாங்கி சென்றுள்ளார். மேலும் இந்த விற்பனையகத்தில் பாம்புகளும் விற்கப்படுவதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக தற்போது வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தான் சரச்ச்சையில் சிக்குவது போதாதென இந்த செல்லபிராணிகள் விற்பனையகத்தையும் சரச்சையில் சிக்கவைத்துள்ளார் வாசன்.