வெளியானது விடாமுயற்சி அப்டேட்! அஜித் ரசிகர்கள் உற்சாகம்
Dec 25, 2024, 19:23 IST1735134789860
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (டிச.27) மதியம் 1 மணிக்கு வெளியாகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தன்னுடைய 62-வது திரைப்படமான விடாமுயற்சி படத்தில் நடித்தார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விடாமுயற்சி படப்பிடிப்பானது அஜர்பைஜானில் நடைபெற்றது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா மற்றும் துணை நடிகையாக ப்ரியா பவானி சங்கர் நடித்து உள்ளனர். விடாமுயற்சி பொங்கல் 2025 ரிலீஸ் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (டிச.27) மதியம் 1 மணிக்கு வெளியாகிறது.