3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
rain

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் நோக்கி நகரும் என்பதால் இன்று திருநெல்வேலி ,இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் இன்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதன் காரணமாக நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

rain

அதேபோல் சென்னை ,ராமநாதபுரம், திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் .நாளை மறுதினம் மற்றும் 27ம் தேதிகளில் சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.