"முதல்வர் மனது வைத்தால் ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்"- வேல்முருகன்
Updated: Oct 10, 2024, 18:52 IST1728566531021
முதலமைச்சர் ஸ்டாலின் மனதுவைத்தால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “என் விமர்சனத்தைத் தாங்க முடியாமல் திமுக என்னைக் கூட்டணியை விட்டு ஒதுக்கினாலும் பரவாயில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் மதுவை விற்க ஆதரவு கொடுக்கவில்லை. நாங்கள் அனைவரும் மதுவிற்கு எதிரானவர்கள். திமுக, அதிமுக பண முதலாளிகள்தான். மது ஆலையை நடத்துகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் மனது வைத்தால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்” எனக் கூறினார்.