“பாமகவிலிருந்து விலகி பாமகவிட வளர்ந்துவிட்டேன்”- வேல்முருகன்

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக புலம்பெயர்ந்தோர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “வெளிநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து பணிக்கு செல்பவர்கள் ஏஜென்சிஸ் மூலம் விசா பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிட்னஸ் சான்றிதழ் கொடுக்காமல் சிலர் மோசடி செய்கின்றனர், வெளிநாட்டிற்கு பணிக்கு செல்லுபவர்களுக்கு மெடிக்கல் பிட்னஸ் வழங்குவதில் திருச்சியில் மிகப்பெரிய மோசடி நடைபெறுகிறது.
கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஒருவரை புதுக்கோட்டையில் லாரி ஏற்றி கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாலியல் குற்றத்திற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதுபோல் கனிம கொள்ளைக்கு சட்ட திருத்தம் செய்ய வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் அதனை தடுக்க வேண்டும். சபாநாயகர் அப்பாவு ஞானசேகரை தம்பி என்று கூறியதை டங் சிலிப் என எடுத்து கொள்ள வேண்டும், பரந்தூர் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள், ஆனால் யார் யாரோ இன்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தால் கச்சதீவினை விட்டு கொடுத்ததாக கூறும் செல்வ பெருந்தகை அதனால் தமிழக மீனவர்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்று கூறமுடியுமா? மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைக்கும் பாஜக எதிர்கட்சியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை தனது கூட்டணிக்குள் கொண்டுவர அவரது உறவினர் வீடுகளுக்கு ED சோதனையை நடத்தியது. இருக்கிற நிதியை கொண்டு கடினபட்டு தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறதூ. பூரண மதுவிலக்கு கொண்டு வந்ததால் தான் கொலை, கொள்ளை கற்பழிப்பு குறையும். மாவட்ட வருவாய் அதிகாரிகளை கட்டுபடுத்தும் இடத்தில் மணல் மாபியாக்கள் உள்ளனர். உத்திரபிரதேசத்தில் மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் குடித்து உயிர்வாழ்கிறார்கள், அதுபோல் தமிழக மக்களை உயிர் வாழ சொல்வது கல்வியாளருக்கு அழகல்ல, அதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாமகவிலிருந்து விலகி பாமகவிட வளர்ந்துவிட்டேன்...தமிழ்நாட்டில் பொதுக்கட்சியாக இருந்து வருகிறேன்” எனக் கூறினார்.