முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

 
1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24-ம் தேதி மாலை 3 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.