சீமான் பேசி வருவது பிரபாகரன் கொள்கைக்கு எதிரானது- திருமாவளவன்

 
திருமாவளவன்

ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. சட்டப்பேரவையை அவமதித்து விட்டு வெளியேறினார், அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்து கலந்து கொள்ளவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கலந்து பேசி முடிவு'; ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா? திருமாவளவன் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்த போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம், தமிழ்நாடு அரசினை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னார். இன்று அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இது தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி! இந்த வெற்றியினை யார் உரிமைக்கோருவது என்பது அல்ல பிரச்சனை... அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கை இது. அதற்காக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றபட்டது அந்த வகையில் மக்களுக்கான வெற்றி.


ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. அவர் ஏற்கனவே உள்வாங்கிய கருத்திற்கு ஏற்பசெயல்படுகிறார். சட்டப்பேரவையை அவமதித்து விட்டு வெளியேறினார். அந்தவகையில் ஆளுநர் தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம். பரந்தூர் நிலை வேறு.. டங்ஸ்டன் நிலை வேறு. டங்ஸ்டன் அமைக்கவிருந்த இடம் பல்லூயிர் பெருக்க இடம். பரந்தூர் மக்கள் விவசாயத்தை அழிக்ககூடாது, எங்களை அப்புறப்படுத்தக்கூடாது என்கிறார்கள், அவர்கள் குறிப்பிட்ட நிலத்தை சுட்டிக்காட்டி அங்கே அமைக்கலாம் என்கிறார்கள் அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். பரந்தூருக்கான செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக நினைக்கிறேன், அந்த வகையில் அது இதற்கு மேல் தடைவிதிக்கப்படாது என நினைக்கிறேன்.

The High Court was unable to answer the question, and the RSS got stuck and  bought the old Thirumavalavan interview! | உயர்நீதிமன்றம் கேள்விக்கு பதில்  அளிக்க முடியாமல் ஆர்.எஸ்.எஸ்., திணறி ...


சீமான் தமிழ் தேசியம் பற்றி இவர் பேசலாம் ஆனால் இவர் பெரியார் பற்றி தனிமனித தாக்குதலை நடத்தக்கூடாது. நான் பிரபாகரன் அவர்களுடன் தமிழ்நாட்டு அரசியல் பேசியுள்ளேன், அவர் ஒருபோதும் யாரையும் தவறாக பேசியதில்லை. பெரியாரையும் தவறாக பேசியதில்லை. இந்திய அரசின் துணை இல்லாமல் ஈழத்தை மீட்டெடுக்க முடியாது என்ற தெளிவு பிரபாகரன் அவர்களுக்கு இருந்தது. ஆனால் தற்பொழுது சீமான் பேசி வருவது பிரபாகரன் கொள்கைக்கு எதிரானது” எனக் கூறினார்.