கள்ளக்குறிச்சியில் இன்று விசிக மது ஒழிப்பு மாநாடு..!

 
thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.  

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; தேசிய மதுவிலக்கு சட்டம்  இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  விசிக-வின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்,  மது மற்றும் போதைப்பொருள்  ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது.  மாலை  3 மணியளவில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார். 

கள்ளக்குறிச்சியில் இன்று விசிக மது ஒழிப்பு மாநாடு..!

மாநாட்டில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அய்யா வைகுண்டர் இயக்கம் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  விசிகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர்,  கட்சி தலைமை பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் , மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர்  கலந்து கொள்ள உள்ளதால்,  மாநாட்டிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.