மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - விசிக கவன ஈர்ப்பு தீர்மானம்!

 
assembly

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளது. சட்டப்பேரவை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ பாலாஜி மனு வழங்கியுள்ளார். வேங்கைவயல் சம்பவம் தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். வருகிற 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது.