“பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல்”- சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்

 
ச்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

சீமான் vs வன்னி அரசு- தலித்துகளை இழிவுபடுத்துன அந்த 2 சினிமா காட்சிகள்-  தவிர்க்க சொல்லலையே ஏன்? | VCK Vanni Arasu questions Seeman on Jai Bhim Row  - Tamil Oneindia

இதுதொடர்பாக வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “#நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான் கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள். அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே.


ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர். அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது  #RSS கும்பல்.இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக் கும்பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார். ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” எனக் குறிப்ப்ட்டுள்ளார்.