திருமாவை முதல்வர் ஆக்காவே நாங்கள் கட்சி ஆரம்பித்துள்ளோம்- வன்னி அரசு
நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது எனது தலைவர் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “இன்று திமுக ஆட்சியில் இருப்பதற்கு விசிக மற்றும் மத்த கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் முக்கிய காரணம். நாங்கள் கட்சி ஆரம்பித்ததின் நோக்கம் திருமாவை முதல்வர் ஆக்கத்தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திமுக - விசிக கூட்டணி தொடர்பாக ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றியில் திமுக, இடதுசாரி, காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வாக்குகளின் பங்களிப்பும் உள்ளது. திமுகவின் வெற்றிக்கும் கூட்டணி கட்சி வாக்குகளின் பங்களிப்பு உள்ளது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு, தமிழ்நாட்டை சிறப்பாக வழி நடத்தும் அரசின் எந்த மாற்றத்திற்கும் விசிக துணை நிற்கும்” என்றார்.