வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா- பூங்கா மூடல்

 
zoo

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, 31 ம் தேதி வரை தற்காலிகமாக முடப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. 

Vandalur Zoo all spruced up for festival crowd - DTNext.in

பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் தினமான நேற்று , மாட்டு பொங்கள் தினமான இன்றும் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கல் அன்று  ஞாயிற்றுக்கிழமை  பொது முடக்கம் என்பதால் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது, பூங்கா மூடப்பட்டு இருக்கும் அதனை தொடர்ந்து திங்கள் கிழமை வழக்கம்போலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வார விடுமுறையான செவ்வாய் கிழமை அன்று உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என நிர்வாகம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில்  வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அதிகாரிகள், விலங்கு பராமரிபாளர்கள்  உள்ளிட்ட 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், ஒரு வனச்சரகர் உள்ளிட்ட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் 31 ம் தேதி வரை தற்காலிகமாக வண்டலூர் உயிரியல் பூங்கா முடப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. 31 ஆம் தேதி அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார்.