நாங்க வேற மாறி… “ட்விட்டரை தெறிக்கவிட்ட வலிமை ஹேஷ்டேக்”; அதிக ட்வீட் வரிசையில் முதலிடம்!

நாங்க வேற மாறி… “ட்விட்டரை தெறிக்கவிட்ட வலிமை ஹேஷ்டேக்”; அதிக ட்வீட் வரிசையில் முதலிடம்!

இந்தியளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் வரிசையில் வலிமை முதலிடம் பிடித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் வரிசையில் வலிமை முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர். எங்கு போனாலும் வலிமை அப்டேட் என்ன? வலிமை அப்டேட் என்ன? என்று ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திலும் அதே தான் நடந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘வலிமை அப்டேட்’ கிடைக்கும் என அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய அளவுக்கு வலிமை படம் பேசுபொருளாகி இருந்தது.

நாங்க வேற மாறி… “ட்விட்டரை தெறிக்கவிட்ட வலிமை ஹேஷ்டேக்”; அதிக ட்வீட் வரிசையில் முதலிடம்!

இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட முதல் 10 ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில், வலிமை முதலிடத்தையும் ‘மாஸ்டர்’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் ‘அஜித் குமார்’ என்ற ஹேஷ்டேக்கும் ஐந்தாவது இடத்தில் ‘தளபதி65’ என்ற ஹேஷ்டேக்கும் இருக்கிறது.

நாங்க வேற மாறி… “ட்விட்டரை தெறிக்கவிட்ட வலிமை ஹேஷ்டேக்”; அதிக ட்வீட் வரிசையில் முதலிடம்!

உலகமெங்கும் கோடான கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ‘பிடிஎஸ்’ எட்டாவது இடத்திலும் உலகையே ஆட்டிப்படைத்த ‘கொரோனா’ 9ஆவது இடத்திலும் தான் இருக்கிறது. அந்த ஹேஷ்டேக்குகளை எல்லாம் பின்னுக்கு தள்ளக் கூடிய அளவுக்கு வலிமை அப்டேட் கேட்டு ட்விட்டரையே தெறிக்கவிட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். அண்மையில் வலிமை படத்தின் ஒப்பெனிங் சாங் வெளியாகி ட்ரெண்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.