டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவோம்- வைத்திலிங்கம் பேட்டி

 
அதிமுகவில் இருக்கும் பலர் திமுகவுடன் கள்ள உறவு: வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பம் என ஓ.பி.எஸ், ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

  வைத்திலிங்கம்

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “எடப்பாடியால் அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க வின் வாக்கு சரிந்து  20 சதவீதமாக குறைந்துவிட்டதால் 2026 தேர்தலுக்கு பின் அ.தி.மு.க அழிந்துவிடும் என்று  டி.டி.வி. தினகரன் கூறுவது உண்மை தான். மேலும் அ.தி.மு.க ஒன்று சேரக்கூடாது என்று நினைப்பவர்கள் தானாகவே வெளியேறிவிடுவார்கள். சசிகலா, டிடிவி தினகரன்  உள்ளிட்ட அனைவரும் 2025 டிசம்பருக்குள் ஒன்றிணைவோம். எடப்பாடியை நாங்கள் இழக்கவிரும்பவில்லை” என்றார்.

முன்னதாக இன்று அவரது ஆதரவாளர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைத்திலிங்கம் தனது வயதை சொல்ல மறுத்ததோடு, வயதை சொல்லக்கூடாது என சிரித்துக்கொண்டே சென்றார்.