சூர்யா விவகாரத்தில் அன்புமணிக்கு வந்த அவசர கடிதம்

 
m

 பாமகவினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது வருத்தமளிக்கிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதியிருக்கிறது. 

 ஜெய்பீம் பட விவகாரத்தில் படத்தில் வன்னிய சமூகத்தினரை அவமதிக்கின்ற வகையில் படத்தில்  காட்சி அமைத்து இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி இருந்த நிலையில்,  படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.   ஆனாலும்  மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ .குரு வின் பெயர் திட்டமிட்டு படத்தில் அந்த போலீசுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் பாமகவினர்.

su

  சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் தொடர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்,   மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால்,  படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.  அந்த திரையரங்க உரிமையாளரும் வேல் படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிட்டுள்ளார்.

 இந்த விவகாரம் பரபரப்பான  நிலையில்,   சூர்யா மயிலாடுதுறைக்கு வந்தால் அவரை எட்டி உதைக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட  தலைவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெ. குருவை அவமதித்த விட்டதாக சொல்லி சூர்யாவின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்று சொல்லியிருக்கிறார் ஜெ.குருவின் மருமகன்.    பாமகவினர் தொடர்ந்து ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அன்புமணிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.

 அந்த அவசர கடிதத்தில்,   ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தின் முத்திரையைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.   எங்கள் தென்னிந்திய வர்த்தக சபை உறுப்பினர் சூர்யாவும் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார் .  அந்த முத்திரையை பயன்படுத்தியதில் சூர்யாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.   ஆனாலும் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்கள் என்பது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.

 அரசியல், சாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை உணர்வுடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வருத்தத்துடன் வேண்டிக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.