தவெக நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை - ஆதவ் அர்ஜுனா

 
aadhav arjuna

உத்தரகாண்டில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டிகளில் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் தலைவராகவும் உள்ள ஆதவ் அர்ஜூனா பங்கேற்றுள்ளார். 

aadhav

இந்நிலையில் தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றிருப்பதால் தவெக நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.