“அவங்கள மாதிரி எனக்கு வேலை இல்லனு நினைச்சுட்டு இருக்காங்களா?”- தமிழிசைக்கு உதயநிதி பதிலடி

 
ச்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்திருக்கும் 108 அவசர ஊர்தியின் கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Image

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சராசரியாக 108 அவசர உதவி மையத்துக்கு நாளொன்றுக்கு 12 ஆயிரம் அழைப்புகள் வரும், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி பண்டிகை என்று 20,000 அழைப்புகள் வருவது வழக்கம். எனவே அவசரகால மேலாண்மை மையத்தில் மூன்று ஷிப்டுகளில்  கூடுதலாக 50 பேர் பணியமத்தப்பட்டு மொத்தம் 194 நபர்கள் அழைப்புகளை ஏற்கும் வண்ணம் பணியமத்தப்பட்டுள்ளனர்.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே தீக்காய பிரிவில் 75 படுக்கைகள் உள்ளன. நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூடுதலாக 25 படுகைகளை ஏற்பாடு செய்துள்ளார். ஏனெனில் தீபாவளி பண்டிகை என்று தீ விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர மேலாண்மை மையத்தில் பணிபுரிபவர்களுக்கு தேவையான அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன 

சென்னை மற்றும் புதுக்கோட்டை அவசரகால மேலாண்மை மையங்கள் இணைந்து செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களுக்கும் தடையின்றி ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் விபத்து நடக்கும் இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்கனவே தயார் நிலையில் நிற்கவைக்கப்பட்டுள்ளன. மேலும் 108 அவசர உதவி மையத்தை அழைக்க பிரத்தியேகமாக 044-40000108 எண் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை என்று காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதிக சத்தங்களை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை, இந்த ஆண்டும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அரசியலும் ஆன்மீகமும் கலக்காது': தமிழிசைக்கு உதயநிதி பதிலடி


அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்ததை விமர்சனம் செய்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பதில் அளித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவங்கள மாதிரி எனக்கு வேலை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா எனக் கூறினார்.