சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

 
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவது போல தமிழகம் முழுவதிலும் இந்த திட்டம் கொண்டு செல்ல அரசு முயற்சி மேற்கொள்ளும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் மாவட்ட திமுக சார்பில் கபாடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு  மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். 
 இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு  ஆயிரம் கபாடி விளையாட்டு வீரர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். 

இதனைதொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ராமநாதபுரம் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் மகிழ்ச்சியாக உள்ளன. மற்ற மாவட்டங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முன் உதரணமாக  உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள மாவட்டம். இந்த மாவட்ட வீரர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகள் சென்று விளையாடி தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். கபாடி வீரர்கள் எலும்பு முறிவு,காயம் ஏற்படுகிறது. இந்த காப்பீடு மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் வரை செலவின்றி மருத்துவ வசதிகள் பெற்றிட முடியும். இந்த திட்டம் சிறப்பாக உள்ளது. இதனை மாநிலம் முழுவதிலும் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிட வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 12,500 ஊராட்சிகளும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அரசு வேலை வழங்கிட வேண்டும் என அறிவித்து அதன் அடிப்படையில் 84 பேருக்கு அரசு வேலை முதல்வர் வழங்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்தில் தொடங்கி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அதேபோல இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்கியுள்ளேன். சட்டமன்ற தேர்தலில் திமுக 200- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும். 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அரசின் திட்டங்களை மக்களிடம் விளையாட்டு வீரர்கள் கொண்டு செல்ல வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு எப்படி தமிழ்நாட்டின் பெயரை தவிர்த்ததோ, அதுபோல தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும்.” என்றார்.