#BREAKING துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவையில் தமிழக அரசு மாற்றம் செய்த நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி. இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாசரும் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன் ஆகியோரின் அமைச்சர் பொறுப்புகளும் மாற்றப்படுகின்றன. துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி உதயநிதி ஸ்டாலின். செந்தில் பாலாஜி, கோவி செழியன், சேலம் ராஜேந்திரன், நாசர் ஆகிய நால்வரும் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.