உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பது திராவிட மாடல் ஆட்சிக்கு வலு சேர்க்கும்- பொன்முடி

 
 அமைச்சர் பொன்முடி..

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பது திராவிட மாடல் ஆட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கெளதமசிகாமண  மாநில மகளிர் அணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார். 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டுமென தெற்கு மாவட்ட கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.அதன் படி இன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதிவியேற்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தான் பெரியார், கலைஞர் வழியில் வந்தவர்கள் என்பதால் அதே வழியில் வந்த  உதயநிதியை வாழ்த்துகிறேன். அவருக்கு வருங்காலம் சிறப்பாக அமையும் என்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலு சேர்க்கும். மேலும் மகளிர் வீடு வீடாக சென்று திமுகவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் மகளீர் அமைப்பு  திமுக பொறுப்பாளர்கள் பொறுப்பிற்கு வந்துவிட்டால் மட்டும் போதாது பொறுப்போடு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.