”நாங்கள் விஷக்காளான் தான்”...ஈபிஎஸ்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

 
Udhayanidhi

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த சில நாட்களாக உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது. இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவையே பாஜகவுடன் இணைத்து விடுவார் என எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினை பார்த்து விஷக்காளான் என விமர்சித்தார். இதனால் திமுக அதிமுக இடையே மீண்டும் வார்த்தை மோதல் முற்றியது. 

eps

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் என்றும் நாங்கள் விஷக்காளான் தான். எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன், நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது' Experience Certificate கொடுத்துக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவரே. நீங்கள் சொன்ன அந்த ‘சேக்கிழ’ ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்? என குறிப்பிட்டுள்ளார்.