சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!

 
1

ராமநாதபுரம் மாவட்டம் குஞ்சார் வலசையில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னவர் ஆளுநர் என்றும் அவரைக் கண்டித்து ஒரு முறையாவது எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளாரா என்றும் கேள்வியெழுப்பினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதை போன்று தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சிறந்த கபடி வீரர்களுக்குக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.