ஃபார்முலா 4 பந்தயத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்த உதயநிதி
ஃபார்முலா 4 பந்தயத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.09.2024) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் (Formula 4 Indian Championship and Indian Racing Leaque) கார் பந்தயத்தின் போது, பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.