செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு உதயநிதி வாழ்த்து

 
உதயநிதி

செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE 'Women Candidate Master' பட்டத்தை வென்ற சிறுமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE 'Women Candidate Master' பட்டத்தை வென்றிருக்கிறார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகா. அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்.

4 வயதிலிருந்தே செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் சர்வாணிகா, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தங்கை சர்வாணிகா, இப்போது புள்ளிகளின் அடிப்படையில் இந்த புதிய சாதனையை எட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.  அவர் இன்னும் பல உயரங்களை தொட நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.