இன்று முதல் தமிழகத்தில் மேலும் 2 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்!

 
1

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும், பெங்களூரு – மதுரை இடையே செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று  31-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். 

அதன்படி எழும்பூர் – நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை , கோவில்பட்டி, நெல்லை வழியாக மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு  இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இதேபோல, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களுருவில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.