#TVKMaanaadu - 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார் விஜய்
Oct 27, 2024, 16:30 IST1730026832696
ரிமோட் மூலம் மாநாட்டு திடலில் உள்ள தவெக கொடியை அக்கட்சி தலைவர் விஜய் ஏற்றினார்.
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டு திடலின் முகப்பு பகுதியில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார் விஜய். ரிமோட் மூலம் மாநாட்டு திடலில் உள்ள தவெக கொடியை அக்கட்சி தலைவர் விஜய் ஏற்றினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை காணொலி வெளியிடப்பட்டது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என காணொலியில் வாசகங்கள் இடம்பெற்றன.