ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிப்பு
Jan 26, 2025, 10:02 IST1737865932303

ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.