விஜய் பாதுகாப்புக்காக தவெக தொண்டர் அணி- நாளை ஆலோசனை
Nov 1, 2025, 21:10 IST1762011601000
தமிழக வெற்றிக் கழக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை பனையூரில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை பனையூரில் நடைபெறுகிறது. விஜய், கட்சி தொண்டர்களின் பாதுகாப்பிற்காக தொகுதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் தலா 2 பேர் வீதம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 468 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தொண்டர் அணி நிர்வாகிகள், விஜய் பிரசாரம் செல்லும் இடங்களில் பாதுகாப்புபணியை கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர் அணிகளுக்கு நாளைய கூட்டத்தில் மேலும் சில முக்கிய ஆலோசனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது போன்ற சம்பவம் இனி நடக்காதவாறு தமிழக வெற்றிக் கழகம் மாவட்டந்தோறும் தொண்டர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.


