"பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் ஒரு அரசின் வெற்றி உள்ளது"- விஜய்

 
ஹ்

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும் என முதல்வர் விஜய் கூறினார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் விஜய், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம்தான். போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது. பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது. உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் ஒரு அரசின் வெற்றி உள்ளது" என்றார்.