இந்த மாதமே மாநாடு நடத்தியாக வேண்டும்- விஜய்
Sep 9, 2024, 15:42 IST1725876730387
தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு குறுகிய காலமே இருப்பதால் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா? என கட்சி நிர்வாகிகள் கேள்டி எழுப்பினர்.
கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் விஜய், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இம்மாதமே நடத்தியாக வேண்டும். தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற வேண்டும். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.