வேங்கைவயல் செல்கிறார் விஜய்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கு சென்று பாதிக்கப்பாட்ட மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மர்மநபர்கள் மனிதக்கழிவை கலந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கு சென்று பாதிக்கப்பாட்ட மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்கிறார்.