"விஜய் கரூர் செல்வது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு"- நிர்மல்குமார்
Oct 14, 2025, 21:46 IST1760458604394
தவெக தலைவர் விஜய் கரூர் செல்வது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கவுள்ளார். எப்போது கரூர் செல்வார் என்ற தேதி குறித்த அறிவிப்பை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிடுவார். விஜய் கரூர் செல்வது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்றார்.


