#TVKMaanaadu உறுதிமொழி ஏற்பு- "ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம்"

 
"ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம்"

ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம் என தவெக மாநாட்டில் உறுதிமொழி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தவெக மாநாட்டில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்படி, “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் விடுதலைக்காகவும் தமிழ் மக்களில் வீரத்துடன் போராடி உயிர் நீற்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தாகம் செய்த ஒலிப்போல் தியாகிகளை இலக்கையின் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

Image

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறை ஆண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதங்கள், இலக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணி காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமையை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என்று குலமாக உறுதி கூறுகின்றேன் நன்றி” என உறுதி ஏற்றுக்கொண்டனர்.