தவெக மாநாடு - 15 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு?

 
vijay

தமிழக வெற்றிக கழக மாநாட்டிற்கு, தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா 1,000 பேர் கணக்கெடுத்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Vijay

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில்  அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநில விஜய் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு என்பதால், மாநாட்டில் 5 முதல் 15 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என கட்சி தலைமை எதிர்பார்க்கிறது. தன்னார்வலர்களாக பங்கேற்க, மாவட்டம்தோறும் 250 பேருக்கு கருப்பு நிற டி-ஷர்ட், ஐடி கார்டு வழங்க தவெக திட்டமிட்டுள்ளது. தமிழக வெற்றிக கழக மாநாட்டிற்கு, தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா 1,000 பேர் கணக்கெடுத்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.