சீக்கிய மக்கள் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

 
TTV

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குருநானக் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இன்று குருநானக் ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சீக்கிய மக்கள் அனைவரும் குருநானக் ஜெயந்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் குருநானக் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குருநானக் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குருநானக் ஜெயந்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் அடிப்படையில் மக்களை இணைத்து மத ஒற்றுமைக்கு மகத்தான பணியை ஆற்றிய குருநானக் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஏற்றத் தாழ்வில்லா சமுதாயத்தை உருவாக்கிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.