டிரம்ப்பின் அடுத்த அதிரடி..! இனி இராணுவத்தில் இவர்களுக்கு தடை..!

அமெரிக்காவில் திருநங்கைகளை பாதுகாப்புப் படைகளில் இருந்து தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
டிரம்ப் தனது உத்தரவில், 'அமெரிக்க ஆயுதப் படைகளின் சேவை, அவர்கள் பிறந்த பாலினத்தைத் தவிர வேறு பாலினமாக அடையாளம் காணும் மக்களுக்கு கௌரவமான, நேர்மையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு பொருந்தாது. ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட இராணுவத் தயார்நிலைக்கு தீங்கு விளைவிக்கும்.' என்று கூறியிருந்தார். இது எதிர்காலத்தில் திருநங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுவதைத் தடை செய்ய வழிவகுக்கும்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் இது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜோ பைடன், டிரம்பின் உத்தரவை நீக்கி நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த முறை, அவர் தொடக்கத்திலிருந்தே நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாக, அவர் அதிபராக பதவியேற்றபோது, "நாட்டில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதற்கு ஏற்ப தற்போது அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.