புதுச்சேரியில் திமுக ஆளும் கட்சியாக வரப்போகிறது- திருச்சி சிவா

 
trichy siva

தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் திமுக ஆளும் கட்சியாக வரப்போகிறது என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி சூளுரைத்துள்ளார். 

Trichy Siva, மாநில மொழிகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது: தி.மு.க., -  எம்.பி., திருச்சி சிவா - dmk-mp-trichy-siva-said-parliament-ignoring-state-languages  - Samayam Tamil

புதுச்சேரி மாநில தி.மு.க. இளைஞரணி சார்பில் உருளையன்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு தொகுதிக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையிலும், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் காந்தி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த பாசறையில், சிறப்பு விருந்தினர்களாக கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு திராவிட இயக்க வரலாறு மற்றும் மாநில சுயாட்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சியில் திருச்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், “இளைஞர்களை வெறும் அரசியல்வாதிகளாக வைத்துக்கொள்ளாமல் லட்சியவாதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பயிற்சி பாசாறை வகுப்பு நடத்தப்படுகிறது. தி.மு.க. கொள்கையில் உறுதி உண்டு. லட்சியம் எது என்ற தெளிவு உண்டு. வழிநடத்துவதற்கு ஆற்றல்மிக்க நல்ல தலைமை உண்டு. செயலாற்றுவதற்கு திறன்மிக்க தொண்டர்கள் உண்டு. வீரர்களும், வீராங்கனையும் நிரம்பிய மிகப்பெரிய ராணுவக்கூடாராம் தி.மு.க. திராவிட இயக்கம் வரலாறு. கழகத்தின் முக்கிய கொள்கை மாநில சுயாட்சி. மாநிலங்கள் அதிகாரங்கள் இன்றி வலிமை குறைந்து செயல்படும் அவலநிலை மாறவேண்டும். தமிழ் மொழியை எந்தவித பின்னனியும் இல்லாத இன்னொரு மொழிக்கு இழக்க முடியாது என்ற உறுதி ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆளும் கட்சியாக உள்ளது. புதுவையில் ஆளும் கட்சியாக வரப்போகிறது. ஆனால் கொள்கை என்று வரும்போது களத்தில் முன்னணியில் நிற்கும் கட்சியாக தி.மு.க. இருக்கும். பதவி நாற்காலியில் ஒட்டிக்கொண்டு இருக்காது. எங்களுக்கு அரசியல்வாதிகள், பணக்காரர்கள் தேவையில்லை போராளிகள் தான் தேவை” என்றார்.