போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் குறைப்பு!

போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டுள்ளது. எப்போதும் 20 சதவீதம் வழங்கும் அரசு இந்தாண்டு 10% போனஸ் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், இதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும் நாளை அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக போனஸ் குறைப்பு தொடர்பாக இணையம் வழியில் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 30 ஆம் தேதியன்று அரசு போக்குவரத்து கழக, ஈரோடு மண்டல ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் 25-வது செயற்குழு கூட்டம் மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாக தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், போக்குவரத்து பணியாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்கவும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.