சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை நிறுத்தம்
ரயில் விபத்து காரணமாக சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அருகே திருவள்ளூரில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. காயமடைந்தவர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் தீ பற்றி தெரிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது
விபத்தில் சிக்கியவரளை மீட்க அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தற்போது வரை எந்த மரணமும் இல்லை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் ரயில் விபத்து காரணமாக சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.