தொடர் மழை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

 
மழை

கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில்  மழை நீர்  தேங்கியுள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

ராஜாபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அவ்வழியேச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கே.கே.நகர் ராஜமன்னர் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதேபோல் வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையிலும் மழை நீர் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் ஹபிபுல்லா சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.