ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள்- நடுக்கடலில் உல்லாசம்

 
ச்

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அரசு உத்தரவை மீறி ஆபத்தை உணராத சுற்றுலா படகு உரிமையாளர்கள், பயணிகளை அழைத்துச் கொண்டு கடலுக்குள் சென்றுவருகின்றனர்.


புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குள் மீன் படகுகள் செல்லவில்லை. அவை அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் சுற்றுலா படகுகள் எந்த ஒரு தடையும் இன்றி வழக்கம் போல் செயல்படுகின்றன. இவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையின் சீற்றத்துக்கு எதிர்த்து சாகசம் செல்வது போல் செல்கிறது. உயிர் பயத்தை ஏற்படுத்த வகையில் இந்த படகுகள் செல்கின்றன. கரையிலிருந்து பார்ப்பவருக்கு மிகப்பெரிய அச்சத்தை இந்த படகுகள் ஏற்படுத்துகின்றன.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை போல சுற்றுலா படகுகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிளின் உயிரோடு விளையாடும் இந்த சுற்றுலா படகுகளை உடனே நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, ‌கடல் சீற்றத்தால் மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா படகுகளும் இயக்குவதற்கு ஏற்கனவே தடை உத்தரவில் உள்ளது. அதனை மீறி சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.